“சில்க் ஸ்மிதா” என்கிட்ட சிக்கல…. பேட்டைக்காரனுக்கு பீலிங்ஸ பார்த்தீங்களா?

Author:
27 July 2024, 1:41 pm

காந்த கண்ணழகியாக வசீகர பார்வை கொண்டு 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பிரபல இயக்குனர் வினு சக்கரவர்த்தியால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் “வண்டிச்சக்கரம்” என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படத்தின் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்து விட்டது. அதை அடுத்து சில்க் ஸ்மிதாவாக ரவுண்ட் கட்டி பலம் வந்தார். குறிப்பாக தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே அவர் 1996 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இன்று வரை இவரது மரணத்திற்கான காரணங்கள் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பல ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக இருந்து வந்த இவர் பல நட்சத்திர பிரபலங்களுக்கும் கனவு நாயகியாக இருந்திருக்கிறார்.

ஆம், அப்படித்தான் சில்க் ஸ்மிதா மீது தனக்கு மிகப்பெரிய கிரஷ் இருந்ததாக பிரபலகுணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் ஆன ஜி எம் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது, சில்க் ஸ்மிதாஅருமையான நடிகை மட்டும் இல்லை. அவர் மிகச் சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனுஷி. அனைவருக்கும் உதவ வேண்டும் என நினைக்கும் பெண். அவர் தன்னைத்தானே நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையான காதல் உறவை தேடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நானும் என்னுடைய மனைவியான பல்லவி உடன் சீரியஸான காதலில் இருந்தேன். ஒரு வேலை நான் என் மனைவியை மட்டும் காதலிக்கவில்லை என்றால் சில்க் ஸ்மிதாவை நிச்சயம் காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பேன் என சில்க் ஸ்மிதா மீது இருந்த க்ரஷை வெளிப்படையாக சமீபத்திய பேட்டிகளில் கூறியிருக்கிறார் ஜி எம் குமார். பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வந்த ஜி எம் குமார் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் பேட்டக்காரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!