விஜய்யின் ‘GOAT’ படத்தின் ட்ரெய்லர்….Poster உடன் வெளிவந்த மாஸ் அப்டேட்!

Author:
15 August 2024, 5:35 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

Goat

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் வெளியாகிவிட்டது. வ்ருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம்… முன்னதாக “The GOAT” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி கூறியிருந்த நிலையில் தற்போது அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி… நடிகர் விஜய்-ன் ‘The GOAT’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ