ஆபாச போஸ் கொடுத்து வெளியான அஜித்தின் First Look போஸ்டர்.. இப்போ எங்க போச்சு உங்க கொள்கை..!

Author: Vignesh
20 May 2024, 11:34 am

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ajith-updatenews360

மேலும் படிக்க: இது தாறு மாறான கார்.. புதிய காரை வாங்கிய கையோடு Vijay Tv சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..!

அஜித் ரசிகர்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து கொண்டாடி வரும் நிலையில், அஜித் நடுவிரலை காட்டுவது போல் போஸ்டரில் இருக்க பலரும் அஜித் இப்ப உங்க கொள்கை எங்க போச்சு என்று கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, அஜித் இளைஞர்களை கெடுக்கும்படி இனி சிகரெட் கூட பிடிக்க மாட்டேன் படத்தில் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது இப்படி ஒரு பர்ஸ்ட் லுக் வெளியாகி எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதனால், பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படுமோசமான கதாபாத்திரத்தில் அக்லியாக அஜித் நடிக்கப் போகிறாரா என்று கேள்விகளும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?