இந்த தடவ மிஸ் ஆகாது மாமே…அஜித்தின் வெறித்தனமா லுக்கில் ரிலீஸ் தேதியை அறிவிச்ச படக்குழு..!

Author: Selvan
6 January 2025, 6:09 pm

வருடத்தின் 100-வது நாளில் களமிறங்கும் அஜித்..

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என படத்தின் நிறுவனம் புத்தாண்டையொட்டி அறிவிப்பு செய்து,ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

Ajith Good Bad Ugly April 10 2025

இதனால் பெரும் மன வேதனையில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு,தற்போது அடுத்தடுத்து இன்பமான செய்தி வந்துள்ளது.அதாவது அஜித் தன்னுடைய கார் ரேஸுக்காக துபாய் சென்றுள்ளதால்,அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில்,அஜித் நடித்த மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: ரேஸுக்கு தயாரான அஜித்…கட்டியணைத்து வழியனுப்பிய ஷாலினி… வைரலாகும் வீடியோ..!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்துள்ள இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.இப்படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில்,தற்போது படக்குழு படத்தை இந்த வருடத்தின் 100-வது நாளான ஏப்ரல் 10ஆம் தேதி அறிவித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரில் அஜித் வெறித்தனமா கையில் துப்பாக்கியுடன் மாஸாக உட்கார்ந்திருக்க புகைப்படத்தோடு,ரிலீஸ் தேதி வெளிவந்துள்ளது.தற்போது குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி தெரிந்துவிட்டதால்,விடாமுயற்சி தேதிக்காக ரசிகர்கள் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?