மீண்டும் பாக்கியாவுடன் இணையும் கோபி?.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அதிரடி திருப்பம்..!

Author: Vignesh
10 April 2023, 10:34 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தவரை முன்னாள் மனைவி பாக்கியா மற்றும் மகள் எழில் தான் வீட்டிற்கு கொண்டு வந்தது சேர்த்தனர். இதனால் ராதிகா செம கடுப்பானார். இதன்பின் போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி பேசினார்.

baakiyalakshmi gopi- updatenews360

கோபி தன்னை இப்படி பேசியதால் வீட்டை விட்டு வெளியேற ராதிகா முடிவு செய்து, கோபி ராதிகாவிடம் தெருவில் கெஞ்சினார்.

baakiyalakshmi gopi- updatenews360

இதனையடுத்து, கோபியின் தாய் கோபியிடம் சென்று மீண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கேட்கிறார். இதை ஓரமாக நின்று பார்க்கும் ராதிகா அதிர்ச்சியடைந்து, இதன்பின் பாக்கியாவை சந்திக்கும் ராதிகா, மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ போறீங்களா பாக்கியா என கேட்க பாக்கியா செம கோபமடைகிறார்.

baakiyalakshmi gopi- updatenews360

இதன்பின், பாக்கியா ‘நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் நீங்க இப்போ வாழ்த்து கொண்டு இருக்கீங்க’ என தெரிவித்தார். இதனால் ராதிகாவும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்க போகிறது என்று.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?