என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!

Author: Selvan
20 March 2025, 7:16 pm

பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்?

இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது கருத்துக்கள் அரசியல்,சமூக அமைப்புகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையும் படியுங்க: செம VIBE ஆக வைக்கும் ரெட்ரோ பட பாடல்.. பற்ற வைத்த 30 seconds வீடியோ!

அறம் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும்.இந்தக் கதையின் முக்கியமான கருத்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால்,அரசு எதுவும் செய்யாது என்பதாகும்.இதற்காக திராவிடர் கழகம் அவருக்கு “தந்தை பெரியார் விருது” வழங்கியது.

தனது சமூக செயற்பாடுகளுக்காக திராவிடர் கழகம் தன்னை எதிர்த்து செயல்படுவதாகவும்,அவர்களது நடவடிக்கைகள் நிஜ வாழ்வில் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிக்கவில்லை எனவும் கோபி நயினார் குற்றம்சாட்டியுள்ளார்.இதன் காரணமாக,அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்ந்து அவமதிக்கும் சூழ்நிலையில்,இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான்,எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் என அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.சமூக செயற்பாட்டாளர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில்,தமிழ்நாட்டிலும் இதே நிலை உருவாகலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தலித் சமூகத்தினர் அரசியல் கேள்விகளை எழுப்புவதற்கு கூட எதிர்ப்பு சந்திக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.இதன் மூலம்,தனக்கு எதிராக திட்டமிட்ட ஒரு வலுவான எதிர்ப்பு உருவாகி வருவதாக தன்னுடைய X தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…