6 வருஷமா போஸ்டர் மட்டுந்தான் வருது; படம் எங்க சார்? கோபி-சுதாகரை ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்!

Author: Prasad
4 August 2025, 7:12 pm

கோபி-சுதாகர் மீது குற்றச்சாட்டு

பரிதாபங்கள் என்ற யூட்யூப் சேன்னலை நிறுவியவர்களான கோபி-சுதாகர் தங்களது யூட்யூப் சேன்னலின் மூலம் பல சமூக விஷயங்களை பகடி செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக வலம் வந்தவர்கள். தற்போது வரை 6.21 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட, தமிழின் முன்னணி யூட்யூப் சேன்னலாக “பரிதாபங்கள்” திகழ்ந்து வருகிறது. 

Gopi sudhakar new movie first look

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு Crowd Funding-ல் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கோபி-சுதாகர் அறிவித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் அவர்களுக்கு பணம் அனுப்பினார்கள். எனினும் அந்த புராஜெக்ட் நகரவில்லை. மேலும் பரிதாபங்கள் யூட்யூப் சேன்னலில் சூப்பர் பேக்கர்ஸ் என்ற செயலியை விளம்பரப்படுத்தினர். அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த புகார் ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து நடிப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில் கோபி-சுதாகர் நடிக்கும் “Oh God Beautiful” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இத்திரைப்படத்தை விஷ்ணு விஜயன் என்பவர் இயக்குகிறார். 

இந்த நிலையில் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும், “6 வருடங்களாக போஸ்டர் மட்டுந்தான் வெளிவருகிறது. படம் எங்கே?” என ட்ரோல் செய்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!