கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…
Author: Prasad17 April 2025, 1:38 pm
கவுண்ட்டர் மணி…
கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து வந்த கவுண்டமணி, சினிமாவிற்குள் நுழைந்து காமெடியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இந்த இணைய யுகத்திலும் அவரது காமெடி காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாக வலம் வருகின்றன. அந்த அளவுக்கு காமெடி லெஜண்டாக வலம் வருகிறார் கவுண்டமணி.

உடைந்து போன மர்மம்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணியை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது உள்ளூரில் படப்பிடிப்பு நடந்தால் பெரிய நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டாலும் அவர்களது வீட்டில் இருந்து அவர்களுக்கான உணவு வந்துவிடுமாம். ஆனால் கவுண்டமணிக்கு மட்டும் வீட்டில் இருந்து உணவு வராதாம்.
காலையில் ஷூட்டிங் வருவதற்கு முன்பு பலரும் வீட்டில் சாப்பிட்டு வந்துவிடுவார்கள், ஆனால் கவுண்டமணி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தபின் ஹோட்டலில் இருந்து வாங்கி வரச்சொல்வாராம். கவுண்டமணி ஏன் வீட்டில் சாப்பிட மாட்டிக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதனுக்கு மர்மமாகவே இருந்ததாம்.
இதனை ஒரு நாள் பயில்வான் கவுண்டமணியிடம் கேட்டே விட்டாராம். அதற்கு கவுண்டமணி, “என் மனைவிக்கு சமைக்கத் தெரியாதுடா, கேவலமா இருக்கும், அதை போய் சாப்புட சொல்றியே” என்று திட்டினாராம். அப்போதுதான் இந்த உண்மை பயில்வானுக்கு தெரிய வந்ததாம்.