திருநங்கையாக மாறிய ஜிபி முத்து.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணமாம்..!

Author: Vignesh
16 October 2023, 9:57 am

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

gp muthu 1 - updatenews360

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

GP-Muthu-1-Updatenews360

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார் ஜி பி முத்து.

வாழ்க்கையில் தனித்துவமாக எதையோ ஒன்றை செய்து சாதித்து காட்டியிருக்கும் ஜிபி முத்து சமீபத்தில் ரூ. 12 முதல் 15 லட்சம் மதிப்புள்ள Kia கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜி பி முத்து ஆர்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜிபி முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

gp muthu-updatenews360
  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!