ரம்யாகிருஷ்ணனின் மகனா சிவகார்த்திகேயன்

Author: Thandora
4 August 2021, 5:53 pm
Quick Share

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் கூட பாலிவுட்டோட டான் ஜாக்கி ஷெராஃப் நேருக்கு நேர் மோதினா எப்படி இருக்கும்? கற்பனை பண்ணி பார்க்கவே நல்லா இருக்குல்ல… அப்படி ஒரு சூப்பரான கற்பனைல்ல கிரியேட் ஆனது தான் இந்த Great Son மூவி….

நேர்மையான போலீஸ்ஸா சரத்குமார், அவரோட செல்ல பிள்ளையா சிவகார்த்திகேயன்னு அதகளமா ஆரம்பிக்குது இந்த திரைப்படம். ஜெயிலரா இருக்க நம்ம சரத்குமார் தன்னோட பையன் சிவகார்த்திகேயன் பெரிய ராணுவ வீரரா ஆகணும்ன்னு ஆசை. ஆனா துறுதுறுன்னு இருக்க சிவகார்த்திகேயனுக்கு சிஏ படிச்சிட்டு ஆடிட்டரா ஆகணும்ன்னு கனவு. நல்லா படிக்கிற சிவா, தன் கனவை நினைச்ச படியே எட்டியும் பிடிக்கிறார். ஆனா அந்த நேரத்துல தான் தன்னோட அப்பா இறந்து போயிட்டாருன்னு அவருக்கு தகவல் தரப்படுது. 

அப்பா இறந்து போன துக்கத்தை தன் மனசுக்குள்ளயே வைச்சிகிட்ட சிவா, தன் அப்பாவோட ஆசைப்படி, இந்திய ராணுவத்தில வேலை பார்க்காட்டியும், Controller Of Defence Accountsல்ல ஆடிட்டரா வேலைக்கு ஜாய்ன் பண்றார். தன்னோட திறமையினால இன்னும் உயரத்துக்கு போற சிவா, இந்திய ராணுவத்தில நடக்குற சில முறைகேடுகளை கண்டுபிடிக்கிறாரு. இதுக்கெல்லாம் காரணமா இருக்கவர் இந்தியாவோட பாதுகாப்பு அமைச்சர்ன்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வருது. பிகில்ல வில்லனா கலக்குன அந்த ஜாக்கி ஷெராஃப் தான் இவ்வளவு ஊழலுக்கும் காரணம்ன்னு தெரிய வந்து அவரை ஆதாரத்தோட ஜெயிலுக்கும் அனுப்புறாரு.

இதெல்லாம் போதும்டான்னு திரும்பவும் சென்னைக்கே வராரு நம்ம சிவா. அப்போ ஒரு கும்பல் சேர்ந்து நம்ம சிவாவை கொலை பண்ணிடுறாங்க….
இடைவெளிக்கு பிறகு தான் நம்ம நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனோட எண்ட்ரி. தமிழ்நாட்டோட நிதியமைச்சரா இருக்காங்க நம்ம பாகுபலி சிவகாமி. பத்திரிக்கை காரங்க கேக்குற கேள்விக்கெல்லாம் ரொம்ப கூலா பதில் சொல்லிட்டு இருக்க ரம்யா கிருஷ்ணன். திடீர்ன்னு சைலண்ட் ஆகுறாங்க… அங்கதான் முக்கியமான ட்விஸ்ட் இருக்கு ஏன்னா அவங்க சைலண்ட் ஆனது நம்ம சிவாவ பார்த்து தான்….

சிவகார்த்திகேயன தான் கொலை பண்ணிட்டாங்களே அப்போ இவர் யாரு? சிவாவ பார்த்து ரம்யா கிருஷ்ணன் ஷாக் ஆனது ஏன்? ஜாக்கி ஷெராஃப் என்ன ஆனாருன்னு நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் நடக்குது இந்த படத்துல….

கிளைமேக்ஸ் தெரிஞ்சிக்க இந்த வீடியோவ முழுமையா பாருங்க!!

Views: - 419

16

2