8 வருடங்களாக கிடப்பில் கிடக்கும் ஜிவி பிரகாஷ் படம்? திடீரென சர்ப்ரைஸ் தந்த படக்குழு?
Author: Prasad16 August 2025, 7:41 pm
மதகஜராஜாவை தொடர்ந்து…
விஷால் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “மதகஜராஜா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது. அதன் பின் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இவ்வாறு “மதகஜராஜா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்களாக கிடப்பில் கிடந்த ஜிவி பிரகாஷ் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

8 வருடங்களாக கிடப்பில் கிடந்த படம்?
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் “அடங்காதே”. இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், மந்த்ரா பேடி, தம்பி இராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இவ்வாறு இத்திரைப்படம் உருவாகி 8 வருடங்களாகியும் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றா. “மதகஜராஜா” திரைப்படத்தை போல் இத்திரைப்படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
