மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!

Author: Selvan
7 November 2024, 10:50 am

சைந்தவியை நினைத்து உருகும் ஜிவி பிரகாஷ்…

சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அப்போதிருந்து ஜிவி பிரகாஷ் ட்ரோலிங்கிற்கு ஆளானார்.

கடுமையான விவாதங்களுக்கு ஆளான இருவரும் அடுத்தடுத்து பிரிந்து சென்றதற்கான அறிக்கையை தங்களுடைய X தளத்தில் பதிவிட்டனர்.

இந்த விவாகரத்து முடிவு எங்களுடைய பரஸ்பர மரியாதையை பேணி கொண்டு மன அமைதிக்காகவும்,மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்வதாக கூறினார்கள்.

எங்களுடைய விவாகரத்து எந்த ஒரு வெளிப்புற சக்தியாலும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுட்டுள்ளனர். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேச பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: படுக்கை ரகசியத்தை உடைத்தெறிந்த முன்னாள் காதலி…சிக்கிய சூப்பர் ஸ்டார்!

இதற்கிடையே ஜிவி பிரகாஷ் இசை அமைத்த அமரன் திரைப்படம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் படக்குழு இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது x தளத்தில் அமரன் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் “எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே”! என்று அமரன் பட பாடல் வரிகளை தன் கைப்பட எழுதி பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று ஆசையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!