சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!

Author: Selvan
24 December 2024, 9:44 pm

தனிப்பட்ட வாழ்க்கை வேறு வேலை வேறு

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் சமீப காலமாக விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர்.அந்தவகையில் ஜி வி பிரகாஷ் சைந்தவி ஜோடி பிரிந்தது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

GV Prakash viral interview

ஜி வி பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்தது வருவது மட்டுமல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வேதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கினார்.

இந்த சூழலில்,அவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு ஜி வி பிரகாஷும் சைந்தவியும் ஒரே மேடையில் பாடலை பாடிய நிகழ்ச்சி ரசிகர்களிடையே வைரல் ஆகி,இருவரும் சீக்கிரம் இணைந்தால் நன்றாக இருக்கும் என கூறி வந்தனர்.

இதையும் படியுங்க: அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!

இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியது “நான் அனைத்து சூழல்களிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்,தனிப்பட்ட வாழ்க்கையும்,நாம் செய்யும் வேலையும் வேறு வேறு என நினைக்க வேண்டும்,அப்படி இருந்தால் மட்டுமே சினிமா துறைக்குள் வர வேண்டும் ,நம்முடைய வேலைக்கு நம்ம வாழ்க்கை இடைஞ்சலாக இருந்தால்,நம்மளால் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார்.வேலை என்று வந்துவிட்டால் மனதில் எதையும் நினைக்க கூடாது,எனக்கும் தனிப்பட்ட மன அழுத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!