இளையராஜா கூப்பிட்டும் போகாத ஜிவி பிரகாஷின் தங்கை – கோபத்தில் கொந்தளித்த குடும்பம்!

Author: Shree
29 March 2023, 8:02 pm
pavani sri
Quick Share

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான இசை குடும்பத்தை சேர்ந்தவர் ஜிவி பிரகாஷ். ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் இவருடைய தாய் மாமா. இப்படி மிகப்பெரிய இசை குடும்ப பின்னணியின் இருந்து வளர்ந்த ஜிவி பிரகாஷ் சின்ன வயதில் இருந்தே ஏ. ஆர். ரஹ்மானிடம் இசை வித்தைகளை கற்றுக்கொண்டார்.

ஆனால், ஜி. வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ அப்படியே அவருக்கு எதிர்மாறாக இருந்தார். அவருக்கு பாடல் பாடுவதில், இசையமைப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். அவரது ஆர்வம் முழுக்க மாடலிங், நடிப்பில் தான் இருந்ததாம். அதனால் மாடலிங் துறையில் இருந்து பின்னர் நடிகையானார்.

அவரது விருப்பத்திற்கும் குடும்பத்தினர் தடைவிதிக்காமல் வழிகாட்டியுள்ளனர். தற்போது பவானி ஸ்ரீ, வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் ப்ரோமோஷனாக நேர்காணல் ஒன்றில் பேசிய பவானி ஸ்ரீ,

நான் இசைகுடும்பத்தில் இருந்து வந்தாலும் எனக்கு இசைமீதான ஆர்வம் இல்லை என்றும் எனது குடும்பத்தினர் என்னை வற்புறுத்தியும் இசை பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை மேலும், இளையராஜ் சார் என்னை ஒரு பாடலுக்கு பாடச்சொல்லி கூப்பிட்ட போது, நான் அந்த அளவிற்கு சிறந்த பாடகி இல்லை என்று கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 294

1

1