வருங்கால கணவரின் First Marriage-ல் கலந்து கொண்ட தனுஷ் பட நடிகை..! அச்சச்சோ… இப்படி ஒரு கதை இருக்கா… வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
5 November 2022, 7:00 pm
dhanush - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய் , சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

dhanush - updatenews360

31 வயதான நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. தனது நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் நடிகை ஹன்சிகா. ஈஃபிள் டவர் முன்பு சோஹைல் தன்னிடம் லவ் ப்ரபோஸ் செய்த போட்டோக்களை வெளியிட்டு தனது திருமணத்தை உறுதி செய்தார்.

அரண்மனையில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது . ஜெய்ப்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் அவர்களின் திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Hansika Motwani (@ihansika)

தோழியின் கணவர்

இந்நிலையில் ஹன்சிகா, சோஹைலின் முதல் திருமணத்தில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கும் சோஹைலுக்கும் ஹன்சிகாவின் தோழி ரிங்கு என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.

ஹன்சிகா பங்கேற்பு

சோஹைல் – ரிங்கு திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சோஹைல் ஈவன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி ஆகிய தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 230

2

3