தொழிலதிபரை கரம் பிடித்த ஹன்சிகா!
தென்னிந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிகர் சிம்புவை முதலில் காதலித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் ஹன்சிகா சில நாட்களாகவே தனது கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டில்தான் வசித்து வருகிறார் எனவும் செய்திகள் பரவியது. எனினும் இதனை குறித்து ஹன்சிகா இதுவரை வாய் திறக்கவே இல்லை.

முதன்முதலில் வாய் திறந்த ஹன்சிகா!
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என் வாழ்க்கையை பற்றிய மக்களின் கருத்துக்களை படிக்கும்போது சிரிப்பு வருவதாக பகிர்ந்துள்ளார். இவரது பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி தற்போது தமிழில் “ரவுடி பேபி”, “மேன்”, “காந்தாரி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
