பவர் போன பவர் ஸ்டார் படம்? முதல் நாளிலேயே கவுந்தடிச்சு படுத்த ஹரி ஹர வீர மல்லு பாக்ஸ் ஆஃபீஸ்?

Author: Prasad
25 July 2025, 12:32 pm

இரண்டு வருடங்கள் கேப் விட்டு நடித்த திரைப்படம்

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஹரி ஹர வீர மல்லு பார்ட் 1”. கடந்த 2024 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் வெளிவரும் திரைப்படம் இது. இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் “ப்ரோ” என்ற திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து அவரது நடிப்பில் “ஹரி ஹர வீர மல்லு” வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. 

சுமாரான வரவேற்பு

ஆனால் “ஹரி ஹர வீர மல்லு” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற சிஜி காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை என விமர்சனங்கள் வருகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. மேலும்  படத்தின் திரைக்கதை சலிப்புத் தட்டுவதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Hari hara veera mallu box office collection report 

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.31 கோடியே வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் முதல் பாகம் வெளிவந்துள்ளது. எனினும் இந்த முதல் பாகத்திற்கே வரவேற்பு சுமாராக உள்ளது.

“ஹரி ஹர வீர மல்லு பார்ட் 1” திரைப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இத்திரைப்படத்தை ஏ எம் ரத்னம், தயாகர் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். எம் எம் கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!