நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும்..! புகைப்படத்தை வெளியிட்டதால் புலம்பும் ரசிகர்கள்..!

Author: Vignesh
5 October 2022, 3:45 pm
Quick Share

பிரபல திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். தனது வருங்கால மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு நல்ல தொடக்கங்கள் ஆரம்பிக்கின்றது என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை அவர் விஜயதசமி நாளில் தனது ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் திருமணங்கள் நடந்து வருகின்றது. வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பலர் திருமணத்தை இந்த ஆண்டில் முடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணமும், நிக்கி கல்ராணி – ஆதி திருமணமும் மிகப் பிரமாண்டமாக நடந்தது. வெள்ளி திரையில் இந்த இரண்டு திருமணங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

சின்னத்திரையில் குக் வித் கோமாளி புகழ் பென்சியா திருமணம், பிளாக் ஷீப் ஓனர் விக்னேஷ் காந்த் திருமணம், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரின் திருமணம், விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவின் திருமணம், ராஜா ராணி சீரியலில் செந்தில் ஆக நடித்து வரும் பாலாஜியின் திருமணம், ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் என இந்த வருடம் முழுவதும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையின் முக்கியமான நபர்களின் திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த திருமணமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடைபெற இருக்கிறது. திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன்தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதற்கிடையே ஹரிஷ் கல்யாணத்துக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால் இவ்வளவு நாள் இந்த செய்தியை பற்றி வாய் திறக்காமல் இருந்து வந்தார் ஹரிஷ் கல்யாண். மேலும் அந்த செய்தியில் செப்டம்பரில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த திருமண செய்தியை தற்போது ஹரிஷ் கல்யாணம் உறுதிப்படுத்தி இருக்கிறார். வருங்கால மனைவியின் கையை பிடித்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர் புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மணப்பெண் யார் என்ற குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 238

0

0