விஜய் கூட நடிகை கனிகா நடிச்சிருக்காங்களா? அடடே இந்த படத்துலயா? இத கவனிக்காம விட்டுட்டோமே!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 8:08 pm
Vijay Kanika - Updatenews360
Quick Share

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கனிகா, நடிகர் விஜய் நடித்து வெளியான சச்சின் படத்தில் கதாநாயகி ஜெனிலியிவிற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அந்த படத்தில் ஜெனிலியா கதாபாத்திரம் சுட்டித்தனமாக, சுறுசுறுப்பாக நடித்திருப்பார். கனிகா குரல் ஜெனிலியாவுக்கு நல்ல பொருத்தமாகவே பார்க்கப்பட்டது.

Views: - 199

4

0