ரஜினியின் சொந்த அக்காவை இதுவரை பார்த்துருக்கிறீர்களா? அச்சு அசல் ரஜினி மாதிரியே இருக்காங்க !

Author: Udhayakumar Raman
25 June 2021, 8:53 pm
Quick Share

All India சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் உலக மக்களுக்கு கூட தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது. அதும்மட்டுமின்றி பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது superstar ரஜினி மட்டுமே.

தற்போது இவர் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இந்த நிலையில், எல்லோருக்கும் தெரியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் அவர்கள் அவ்வப்போது ரஜினிகாந்த் குறித்து பேட்டி அளிப்பார் என்பதும் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பல ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் குறைந்தபட்சம் அவரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள்.

இவரின் சகோதரி அஸ்வத்பானு என்பவரின் புகைப்படம் இதுவரை யாரும் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை, ஏன் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிலையில் ரஜினியின் சகோதரி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அச்சு அசலாக ரஜினி போலவே இருக்கும் அவருடைய அக்காவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

Views: - 725

179

46