உயர உயர பறக்கும் மாஸ்டர்: தமிழத்தில் அள்ளிக் குவித்த வசூல்!

15 January 2021, 3:17 am
Quick Share


விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் இரண்டாம் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.40 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது.

மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். கைதி படத்தைப் போன்று இந்தப் படத்திலும் இருட்டு, லாரி, வாளி, போதைப் பொருள் அவரது சாராம்சம் இடம் பெற்றுள்ளது.


முதல் பாதியை விஜய்க்குரிய படமாகவே எடுத்துள்ளார். இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் தனக்குரிய படமாகவே எடுத்துள்ளார். அதில், கொஞ்சம் விஜய்யின் நக்கல், நய்யாண்டியை பாடலாக கொடுத்துள்ளார். ஆம், டி ராஜேந்தர் பாடும் வாடா என் மச்சி வாழக்கா பச்சி என்ற பாடலை பாடியுள்ளார்


மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரலங்கள் நடித்துள்ளனர்.


எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சினிமா ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வசூலில் சாதிக்க ஒன்றும் தவறவில்லை.
வசூல் ரீதியாக மாஸ்டர் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதே போன்று மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல்.எம் கூறியிருப்பதாவது: முதல் நாளில் மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. தொடர்ந்து 2ஆவது நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


சென்னையைப் பொறுத்தவரையில், 2ஆவது நாளில் ரூ.1 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இரண்டு நாட்கள் முடிவில் சென்னையில் ரூ.2.26 கோடி வசூல் அள்ளியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இவரைத் தொடர்ந்து சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா கூறியிருப்பதாவது: முதல் நாளில் ஆந்திராவில் மாஸ்டர் படம் ரூ.5.74 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 2ஆம் நாள் முடிவில் ரூ.1.6 கோடி வரையில் வசூலித்துள்ளது. ஒட்டு மொத்தமாக ஆந்திராவில் ரூ.7.34 கோடி வசூலித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் ரூ.2 கோடிக்கும் அதிகமாகவும், அமெரிக்காவில் 93 லட்சம் வரையிலும் வசூல் குவித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0