நிம்மதியா கல்யாணம் பண்ண விடுறாங்களா? திடீரென விஷால் மீது குண்டை தூக்கி போட்ட நீதிமன்றம்? 

Author: Prasad
5 June 2025, 1:42 pm

திருமணத்தை அறிவித்த விஷால்

47 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்த விஷால், சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்தார். நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்தப் பிறகுதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால். அதன்படி வருகிற ஆகஸ்து மாதம் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில் அம்மாதம் 29 ஆம் தேதி சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் விஷால். 

இந்த நிலையில் லைகா விஷால் மீது தொடுத்த வழக்கில் இன்று ஒரு அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

30% வட்டியுடன் திருப்பித் தரவேண்டும்

பல ஆண்டுகளுக்கு முன்பு விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து ரூ.21.29 கோடியை கடனாக பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை திருப்பி அளிக்கும் பொறுப்பை விஷாலிடம் ஒருந்து லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அந்த கடன் தொகையையும் செலுத்தியது. அதற்கு பதிலாக விஷால் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையை தனது நிறுவனத்திற்கு வழங்கவேண்டும் என லைகா விஷாலுடன் ஒப்பந்தம் போட்டது. 

hight court ordered vishal to return money to lyca with 30% interest

ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் பல திரைப்படங்களை வெளியிட்டுள்ளதாக லைகா நிறுவனம் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்குத் தொடுத்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் திருப்பி அளிக்கவேண்டும் என விஷாலுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் தனது திருமணத்தை அறிவித்த சில நாட்களிலேயே இவ்வாறு தீர்ப்பு வந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இது குறித்து பேசப்பட்டு வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!