கிரிக்கெட் வீரரா; அடையாளம் தெரியலை; ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Sudha
11 July 2024, 1:19 pm

தமிழில் இசையமைப்பாளராக, நடிகராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி.இவர் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார்.அவரை கண்ட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதற்கிடையில் ஒரு நபர் ஆதியை சந்தித்து அவர்க்கு நன்றி சொல்லி இருக்கிறார்.அவர் எதற்காக நன்றி சொல்கிறார் என விசாரித்த பிறகே ஆதிக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. ஆதியை கேப்டன் ரோஹித் சர்மா என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் அந்த நபர்.

என்னை பார்த்தால் ரோஹித் சர்மா மாதிரி தெரிகிறதா என ஆதி கேட்க அவரும் ஆமாம் என சொல்லி இருக்கிறார். இதையடுத்து நான் ரோஹித் சர்மா இல்லை. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு இசையமைப்பாளன் என்று கூறியிருக்கிறார் ஆதி. அதை கேட்ட அந்த நபர் சிரித்துவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார்.

17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதையடுத்து ஹிட்மேன் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வை ஆதி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் போட்டோ எடுத்ததை பார்த்துவிட்டு, என் பின்னால் வந்தார். பக்கத்தில் வந்ததும் அட நம்மாளுனு சொல்லி போட்டோ எடுத்தார்.நான் சிட்னியில் இருந்து வருகிறேன் என்றார். ஓ அப்படியா ஹலோனு என்றேன். பிறகு எனக்கு நன்றி சொன்னார்.சரி நம்ம பாட்டால் கவரப்பட்டார் போல என நினைத்தேன் இருந்தாலும் சந்தேகமாக இருந்தது. நமக்கு எதற்காக நன்றி சொல்கிறார் என அவரிடமே கேட்டேன். உலகக் கோப்பையை வென்றதற்கு நன்றி என சொன்னார். சார், நீங்க வேற யாரோனு நினைச்சு என்னுடன் போட்டோ எடுக்கிறீங்கனு சொன்னேன். இல்லை இல்லை நீங்க யாருனு எனக்கு தெரியும் என்றார்.யாருனு சொல்லுங்க என கேட்டதற்கு ரோஹித் சர்மானு சொன்னார் என்று பதிவிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களை பார்த்தால் ரோகித் ஷர்மா போல் உள்ளது. ஆனால் உங்களை விட அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை பார்த்தால் தான் ரோகித் சர்மாவை போல் தெரிகிறார்.நீங்கள் தவறான ரோகித் சர்மாவை டேக் செய்து விடப் போகிறீர்கள் நீங்கள் டேக் செய்தது “சிக்கந்தர் சார்மாவாக” இருக்கலாம் என காமெடியாக பதிவிட்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!