கமல்ஹாசனை காப்பி அடித்தேன்; ஒப்புக்கொண்ட ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் இயக்குனர்!..

Author: Sudha
4 July 2024, 4:54 pm

தமிழ்த் திரைப்படங்கள் சில ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக இருக்கும். இன்னும் சில தமிழ்த் திரைப்படங்களோ ஹாலிவுட் இயக்குனர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்திருக்கிறது.

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் குவெண்டின் ஜெரோம் டேரண்டினோ அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவரது திரைப்படங்கள் டார்க் காமெடிக்காக சிறப்பு பெற்றது.

இவருடைய கில் பில் திரைப்படம் உலக பிரசித்தி பெற்றது.இது பல பகுதிகளாக வெளி வந்தது.இதன் முதல் பகுதியில் சில அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

அனுராக் காஷ்யப் உடனான ஒரு நேர்காணலில் இந்த காட்சிகளை எடுப்பதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக ஒரு தமிழ் படம் இருந்தது என சொல்லிருக்கிறார்.

அந்த திரைப்படம் கமல் நடிப்பில் வெளியான
ஆளவந்தான்

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…