மாஸ்டர் கலெக்‌ஷனை பிரிச்சு கொடுக்க முடிவு!

29 January 2021, 6:29 pm
Quick Share

உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.239 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். ஒட்டுமொத்த சினிமா ரசிகரையும் திரையரங்கிற்கு அழைத்து வந்த படம் என்றால் மாஸ்டர் படத்தை சொல்லலாம். கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறை மட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும், சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். என்னதான் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள்,

கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானாலும், விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தளபதி விஜய் மற்றும் தயாரிப்பு குழு அனைவருமே மாஸ்டர் படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தனர். அப்படியே செய்தும் காட்டினர். கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தை திரையிட்டனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், நாசர், அர்ஜூன் தாஸ்,

ரம்யா சுப்பிரமணியன், சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார் என்று ஏராளமான பிரபலங்கள் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ரூ.239 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. இதே போன்று தமிழகத்தில் ரூ.129 கோடியும், சென்னையில் ரூ.10 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளது.
மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக, மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும், ஆதலால், கூடுதலாக 10% ஷேர் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் 3ஆவது வார திரையரங்கு கலெக்‌ஷனை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று அனைவரும் பிரித்துக் கொள்ள தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அனுமதியளித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Views: - 23

0

0