அடேங்கப்பா? மாஸ்டர் படத்தை ஓடிடியில ரிலீஸ் பண்ண இத்தன கோடியா?

29 January 2021, 3:00 pm
Quick Share


விஜய் நடித்த மாஸ்டர் படம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது.


விஜய் நடித்த மாஸ்டர் படம் பல பிரச்சனைகளையும், போராட்டங்களையும் கடந்து ஒரு வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மாஸ்டர் படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மாஸ்டர் படம் திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் 15 நாட்கள் முடிவில் ரூ.239 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.129 கோடிக்கும் அதிகமாகவே வசூல் அள்ளியுள்ளது. இதைவிட சென்னையில் மட்டும் மாஸ்டர் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்துள்ளது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி முதல் ஹிட் பிளாக்பஸ்டர் படமாக மாஸ்டர் படம் அமைந்துள்ளது. மாஸ்டர் படம் மட்டுமல்லாமல், மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் இந்தியாவில் டாப் ஆல்பம் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், மாஸ்டர் படம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட எத்தனை கோடி அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கொடுத்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாஸ்டர் படத்தை வெளியிட முதலில் ரூ.36 கொடுத்துள்ளது. அதன் பிறகு கூடுதலாக ரூ.15.5 கோடி என்று ஒட்டு மொத்தமாக மாஸ்டர் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுவதற்கு அமேசான் நிறுவனம் ரூ.51.5 கோடி வரையில் கொடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படம் ஓடிடியில் வருவதற்கு முன்னதாகவே தயாரிப்பு நிறுவனத்திடம் கூடுதலாக 10% நஷ்ட ஈடு கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Views: - 0

0

0