நண்பர்களால் உயிரை விட்ட என் அப்பா..பிரபல நடிகரின் மகன் உருக்கம்.!

Author: Selvan
20 February 2025, 8:09 pm

நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர் நடிகராக ஜொலித்து கொண்டிருந்த போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவருடைய மகன் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: புது அவதாரத்தில் ‘டைட்டானிக்’ பட ஹீரோயின்…செம அப்டேட்டா இருக்கே.!

நடிகர் பாண்டியன் சினிமாவில் பிஸியாக இருந்த போது,திடீரென ஒரு அரசியல் கட்சியில் இறங்கி அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்,அதன் பிறகு சினிமாவில் அவருடைய மார்க்கெட் மங்க தொடங்கியது.அரசியல் வட்டாரத்தில் பல நண்பர்கள் கிடைத்ததால்,அவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

தன்னுடைய அப்பா நண்பர்கள் சுற்றியே அவருடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார் என்று அவருடைய மகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று செலவு செய்துள்ளார்,கடைசியில் என்னுடைய அப்பா கை செலவுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்பட்டார்,நெருங்கிய நபர்கள் பலர் அவரை ஏமாற்றியதால் குடிக்கு ரொம்ப அடிமையாகி அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டது.

அவர் உயிர் பிரிந்ததற்கு அவருடைய நண்பர்கள் தான் காரணம் என ரொம்ப மன வேதனையோடு அந்த பேட்டியில் பாண்டியன் மகனான சோலை பாண்டியன் தெரிவித்திருப்பார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!