நான் தான் இங்க சூப்பர் ஸ்டார்… விஜய்க்கு நேரடியாகவே WARNING கொடுத்தாரா ரஜினி?

Author: Shree
22 July 2023, 5:53 pm

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவரது 169வது படமாக இயக்குனர் ஜெயிலர் படம் ஷூட்டிங் மும்முராக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே பொரும் அக்கப்போரே நடைப்பெற்று வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்தனர். இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடினர். இப்படியொரு நிலையில் என்னை தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் இல்லை என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் பாடலில் இடம்பெற்ற “பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா, உசுர கொடுக்க கோடி பேரு” என்ற வரிகள் நேரடியாகவே சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்ததாக பறிக்க நினைக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்யை எச்சரிப்பது போன்று இருந்தது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செய்யாறு பாலு, ” நான் தான் இங்க கிங் நான் வச்சது தான் சட்டம், அந்த சட்டத்தை நானே களைப்பேன் என்றல்லாம் பேசி விஜய்க்கு நேரடியாகவே வார்னிங் கொடுத்துவிட்டார் என அவர் கூறினார்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!