எனக்கு பொண்ணு இல்லன்னு ரொம்ப வருத்தம்…. விவாகரத்துக்கு முன் மனம் திறந்த தனுஷ்!

Author: Shree
16 July 2023, 4:10 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்றார். தனுஷுக்கு திருமணம் ஆன அந்த சமயத்தில் அவர் அப்படி ஒன்றும் பெரிய ஹீரோவாக இல்லை. இருந்தாலும் ரஜினி அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து மகளை கட்டிக்கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து தனுஷுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து அவரை டாப் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தினார் ரஜினி. கிட்டத்தட்ட அவரது மொத்த வெற்றிக்கும் பின்னர் ரஜினி தான் இருந்தாராம். என்ன தான் திறமை இருந்தாலும் சினிமா துறையை பொறுத்தவரை யாரேனும் மிகப்பெரிய ஆள் பலம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் எந்த தொல்லைகளும், தொந்தரவும் இல்லாமல் முன்னேற முடியும்.

எனவே ஒவ்வொரு படி முன்னேற்றத்திற்கும் ரஜினி கூடவே இருந்ததால் தான் தனுஷ் இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்தபின்னர் ரஜினிக்கும் – தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் தனது பெண் பிள்ளை இல்லை நின்ற வருத்தம் இருந்ததாகவும் ஆனால். அண்ணன் செல்வராகவனின் மகள் லீலாவதி தன் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து மகள் இல்லை எண்ணற்ற வருத்தமே போய்விட்டதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ:

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?