“அவரை நான் பிரிகிறேன், அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” பட்டாஸ் பட ஹீரோயின் அதிரடி !

4 July 2021, 11:23 am
Mehrin - Updatenews360
Quick Share

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார்.

வயதான தனுஷுக்கு நாயகியாக சினேகாவும், மகன் தனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதலித்தார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்தது.

தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “நானும் பவ்யா பிஷ்னோவும் நிச்சயதார்த்தம் நடந்த இந்த சமயத்திலிருந்து உறவை முடித்துக் கொள்கிறோம். இந்த நிச்சயதார்த்தம், திருமணம் வரை செல்லாது. இந்த நொடியிலிருந்து எனக்கும் அவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், எந்தவித சம்பந்தமும் கிடையாது, எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை”என்று பகிரங்கமாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது திருமண முறிவை தெளிவுபடுத்தியுள்ளார்.

Views: - 265

0

0