இந்தியில் பேச முடியாது.. யாருக்கு புரியுமோ அவங்க புரிஞ்சுப்பாங்க… காட்டமான கஜோல்!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2025, 1:37 pm
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி கஜோல், தனது தனித்துவமான பாணியால் எப்போதும் ரசிகர்களை கவர்ந்தவர். மகாராஷ்டிர அரசு நடத்திய 2025-ஆம் ஆண்டு மாநில திரைப்பட விருது விழாவில், தனது தாய் தனுஷாவுடன் கலந்துகொண்டு மேடையை மேலும் மிளிரச் செய்தார்.
இந்திய சினிமாவில் கஜோலின் அளப்பரிய பங்களிப்பை பாராட்டி, அவருக்கு மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த கஜோல், ஆங்கிலத்திலும் மராத்தியிலும் கேள்விகளுக்கு பதிலளித்து அசத்தினார்.
So Kajol controversy is:
— Daughter of SRKajol (@OfSrkajol) August 6, 2025
तिच्या बरोबरच्या कोणी तरी तिला हींदीतनं बोलायला सांगितलं. पण तिला मराठी पुरस्कार सोहळ्यात मराठीत बोलायचं होतं, आणि पत्रकार सुद्धा तिच्याशी मराठीतच बोलत होते. तर ती म्हणाली, "ज्याला समजायचं असेल तो समजेल", जे तिथले ९९% होते. आता जळणाऱ्याची कुठेही जळते. https://t.co/g2eraBAbKH pic.twitter.com/w0sA2ipW0y
ஆனால், அப்போது ஒரு பத்திரிக்கையாளர், “இந்தியில் பதிலளிக்க முடியுமா?” என்று கேட்டதும், கஜோல் தனது பாணியில் ஒரு புன்னகையுடன் கலகலப்பாக பதிலளித்தார்
“இப்போ நான் இந்தியில பேசணுமா? நான் பேசினது புரிய வேண்டியவங்களுக்கு புரியும்!” என கோபத்துடன் கூறி சென்றார். கஜோலின் இந்த பதில், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
