எனக்கு Triplets இருந்துச்சு…பேட்டியின் நடுவே கலங்கி அழுத விசித்திரா!

Author: Shree
4 November 2023, 1:16 pm

90ஸ் காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் பெயர் பெற்றவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி உள்ளிட்ட வேடங்களில் இவர் நடித்துள்ளனர்.

குறிப்பாக வில்லி வேடமும் , கவர்ச்சி வேடங்கள் இவருக்கு பக்காவாக பொருந்தும். 10ம் வகுப்பு படிக்கும்போதே திரைத்துறையில் நுழைந்த விசித்ரா அதன் பின்னர் போர்க்கொடி என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த விசித்திர கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனால். ஆம் விசித்ராவுடன் கல்வி சர்ச்சையில் சிக்கி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இந்நிலையில் விசித்திரா பேட்டி ஒன்றில், எனக்கு Triplets இருந்துச்சு அதாவது ஒரே கருவில் மூன்று குழந்தை இருந்தது அதில் ஒன்று சரியான வளர்ச்சி இல்லை என டாக்டர் கூறியதால் கருக்கலைப்பு செய்துவிட்டேன். அதை நினைந்து நான் இப்போதும் வருந்துகிறேன். அந்த குழந்தை மட்டும் இருந்திருந்தால் இன்னேரம் எனக்கு 4 பிள்ளைகள் இருந்திருப்பார்கள். அந்த குழந்தை நிச்சயம் பெண் குழந்தையாக தான் இருந்திருக்கும். என் கணவர் கூட அது பெண் குழந்தை என்று தான் சொல்லுவார் என கலங்கியபடி கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!