அட்டகத்தி தினேஷா இது…. வயசாகி ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டு இருக்காரே!

Author: Shree
2 June 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். அதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம்,மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் அளவில் புகழ் பெற்றார். இதனிடையே புது நடிகர்களின் திறமை இருந்தும் மார்க்கெட் இழந்தார். பின்னர் சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டகத்தி தினேஷ், வயதான தோற்றத்தில், நரைத்த தாடி, முடி என ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டார். இயக்குனர் வெற்றிமாறன் உடன் எடுக்கப்பட்டுள்ள இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து சிலர் விடுதலை படத்துல சூரி character ல இவர் நடிச்சிருந்த நல்லா இருக்கும் என கூறி வருகிறார்கள். ரொம்ப அருமையான நடிகர். நல்ல கலைஞர்களை இந்த திரை உலகம் பயன்படுத்தி கொள்ளாதது வருத்தம். இதோ அந்த வீடியோ.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!