“உன்னை பிக்பாஸுக்கு நான் அனுப்பியிருக்க கூடாது.. ஏன்னா” ரியோவின் மனைவி உருக்கம் !

1 November 2020, 9:00 am
Quick Share

முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவிக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த ரியோ சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார். மறுபடியும் 5ல் குரு பார்க்க சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனை கையை சுட்ட நிலையில்,

தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும்
புதிய படத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் ரியோ பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைய அவரை ஆதரிக்க ஒரு கூட்டமும் அவரை எதிர்க்க ஒரு கூட்டமும் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது கணவர் பற்றி நெகிழ்ச்சியான ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது “நான் உன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்க கூடாது. எனக்கு தெரியாது அது நமக்கு ஏற்ற இடமில்லை என்று. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்

Views: - 20

0

0

1 thought on ““உன்னை பிக்பாஸுக்கு நான் அனுப்பியிருக்க கூடாது.. ஏன்னா” ரியோவின் மனைவி உருக்கம் !

Comments are closed.