அடுத்த ஜென்மத்தில் சூர்யா என் கணவரா வேண்டும்…. பாடகி சுசித்ரா ஏக்கம்!

Author:
1 அக்டோபர் 2024, 3:59 மணி
surya suchithra
Quick Share

சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி சர்ச்சைக்குரிய பாடகியாக பார்க்கப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாக பணியாற்றி அதன் பிறகு பாடகியாக பல்வேறு திரைப்படங்களில் பாடியிருக்கிறார் .

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் பாடி மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருந்தபோது சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி மிகவும் மோசமாக சர்ச்சைக்குரிய பாடகியாக விமர்சிக்கப்பட்டார்.

Suchithra

மேலும், நடிகர் தனுஷ் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தார் என்றும் தன்னுடைய கணவரான கார்த்திக் குமார் தனுஷ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்றும் கூறியதோடு பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை லீக் செய்து பேரதிர்ச்சியை கொடுத்தார் சுசித்ரா.

இதனால் இவர் சர்ச்சைக்குரியவராக பார்க்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா மீது தனக்கு இருந்த அதீத ஆசை குறித்து வெளிப்படையாக பேசி எல்லோரது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் .

அதாவது அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது. அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு யார் கணவராக அமைய வேண்டும் என கேள்வி கேட்டதற்கு நடிகர் சூர்யா என பதிலளித்து ஷாக் கொடுத்தார். ஆயுத எழுத்து படம் பண்ணும் போது இருந்த சூர்யா மேல் எனக்கு ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது.

surya -updatenews360

நான் என் பாட்டியிடம் சூர்யா வீட்ல போய் பேசலாமா? என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி யாரை கூட்டிட்டு போறது? நீயும் நானும் தான் போகணும். ரொம்ப அசிங்கமா நினைப்பாங்க. அவங்க எல்லாம் பெரிய சினிமாக்காரங்க… பெரிய சினிமா குடும்பம்…. செருப்பால அடிச்சு அனுப்பிடுவாங்க என்று சொன்னாங்க.

இதையும் படியுங்கள்: அட்டகத்தியா? கெத்தா? இனிமேல் இப்படி கூப்பிடுங்க தினேஷே சொல்லிட்டார்!

அதனால அன்னைக்கு நைட்டே நல்லா அழுது என்னுடைய மனதை சமாதானப்படுத்தி என்னுடைய பீலிங்கை கட் பண்ணி விட்டுட்டேன் என்று பதில் அளித்திருந்தார். இதை கேள்விப்பட்ட சூர்யாவின் ரசிகர்கள் நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கல. இருந்தாலும் உங்களுக்கு அளவுக்கு மீறிய ஆசைதான். நீங்கதான் தைரியமான ஆளாச்சே போய் கேட்டு தான் பாருங்களேன் என்றெல்லாம் விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 117

    0

    0

    மறுமொழி இடவும்