“மாஸ்டரையும், தளபதியையும் பார்க்காமலயே போறேன்” ட்வீட் செய்துவிட்டு தற்கொலை செய்த விஜய் ரசிகர்…!

14 August 2020, 1:15 pm
Quick Share

பலரும் #RIPbala டிவிட் செய்து வருவதால், தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. யாருடா இந்த பாலா? என்று ட்விட்டர் சென்று பார்த்தபோது விஜய் ரசிகர் என்பது தெரிய வந்தது.

ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்த இவர் கடந்த 3 நாட்களாக அந்த பக்கமே வரவில்லை. கடைசியாக கடந்த 11ம் தேதி தான் அவர் ட்வீட் செய்திருக்கிறார். பாலாவுக்கு காதல் பிரச்சனை என்று சொல்லப்பட்டது. ஆனால் தனக்கு காதலில் எல்லாம் பிரச்சனை இல்லை வீட்டில் தான் அனைவரும் வெறுப்பதாக கூறி ட்வீட் செய்தார் பாலா.

ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான் என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டுத்தான் இருக்கன். ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த ட்வீட்டை பார்த்த சக விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் அவர் நான் போகிறேன், என் ஐடியை வேறு யாராவது வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மாஸ்டர் படத்தையும் தளபதியையும் கடைசி வரை பார்க்காமலேயே போவதாக ட்வீட் செய்தார். அது தான் அவர் போட்ட கடைசி ட்வீட்.

அதன் பிறகு பாலா தான் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விஜய் ரசிகர்களுக்கும் மற்ற நடிகரின் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

இதில் சோகமான விஷயம் என்ன என்றால் பிரபல பாலிவுட் நடிகர் பிரசாந்த் சிங் தற்கொலையின் போது, “எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தற்கொலை தீர்வாகாது” என்று ட்வீட் செய்து கடைசியில் இவரும் அந்த முடிவுதான் எடுத்துள்ளார் என்பது தெரியவரும் போது மனதில் பாரமாக தான் உள்ளது.