“அவரை தான் Nominate பண்ணுவேன்” – சபதம் எடுத்த ஷிவானி ! அப்போ உங்களுக்குள்ள காதல் இல்லையா ?

Author: Poorni
15 October 2020, 10:08 am
Quick Share

Big Boss ஆரம்பித்த புதிதில் ஷிவானி-பாலாஜியும் ஒரு நாள் இரவு முழுவதும் வாக்கிங் சென்று, இன்ப உலா கண்டதை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனோட ஆரவ் ஓவியா இவங்கதான் என கருதினர். ஆனால் நடப்பதை பார்த்தால் அதற்கு உல்டாவாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ சின்ன உரசல் நிகழ்ந்துள்ளது போல. அது மட்டும் இல்லாமல் இது ஒரு Game என்று ஷிவானி நன்றாக புரிந்து கொண்டு உள்ளே வந்திருப்பதால் காதலில் சிக்க வாய்ப்பில்லை என்பதும் கனகச்சிதமாக தெரிய வருகிறது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் ஜோடி டான்ஸ் மற்றும் பந்தை பவுலுக்குள் போடும் டாஸ்க் நிகழ்ந்தது. ஜோடி டான்ஸில் ஆஜித்-கேப்ரியலா, ரியோ-நிஷா, அனிதா-சுரேஷ், வேல்முருகன்-சனம் ஷெட்டி ஜோடிகளாக டான்ஸ் ஆடி சக போட்டியாளர்களையும் ஆட வைத்தனர். அதன் பிறகு பந்து பவுலில் போடும் Task நடந்தது. அதன் பிறகு சில போட்டியாளர்கள் ஒன்றாக கூடிய பந்து டாஸ்க் குறித்து பேசினர்.

ஷிவானி, ரம்யா, சம்யுக்தா அமர்ந்து அந்த டாஸ்க்கை பற்றி பேச ஆரம்பிக்க. அப்படியே ஆஜித்-கேப்ரியலா, பாலாஜி மூவரும் அமர்ந்து பந்து டாஸ்க் குறித்து பேசினர். இதில் பாலாஜி, ஷிவானியை இஷ்டத்துக்கு கிண்டல் அடிக்க, பிக்பாஸ் சரியாக கேமராவில் ஷிவானியை காட்டி இவரைபற்றிதான் பேசுகிறார் என்று அவரை காட்டி புரிய வைத்தார். இந்த நிலையில் டாஸ்க்கின் போது ஏன் பாலாஜியை வெளியே அனுப்பினேன் என்பதற்கு ஷிவானி விளக்கம் அளித்தார். அப்போது அடுத்த வாரம் தான் கண்டிப்பாக பாலாஜியை நாமினேட் செய்வேன் என தெரிவித்தார்.

Views: - 52

0

0