பிகில் சாதனையை முறியடிக்குமா மாஸ்டர்? இன்னும் 7 நாட்கள் இருக்கு!

22 January 2021, 6:49 pm
Quick Share


விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் 17 நாட்களில் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்து பிகில் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் 10 மாதங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. போதைப் பொருள், கல்லூரி, சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகியவற்றை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கடந்தாண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. என்னதான் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வெறும் மூன்றே நாட்களிலேயெ ரூ.100 கோடி வரையில் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவ்வளவு ஏன், உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளது. தமிழகத்திலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ரூ.100 கோடி வரையில் வசூலித்த படங்களின் பட்டியலில் விஜய்யின் மாஸ்டர் படம் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்னும் 7 நாட்களில் ரூ.100 கோடி வரையில் வசூலித்தால்,

(ஒட்டுமொத்தமாக 17 நாட்களில் ரூ.300 கோடி) பிகில் படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான பிகில் படம் வெறும் 17 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடி வரையில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0