சினிமாவுல சான்ஸ் இல்லையா? ஒரே வழி இது தான் – எதற்கும் தயாராக இருக்கும் இவானா!

Author: Shree
4 July 2023, 12:59 pm

கேரள பைங்கிளியான இவனா மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகம் ஆனார், மாஸ்டர்ஸ், ராணி பத்மினி, அனுராகா கரிக்கின் வெல்லம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அலீனா ஷாஜி என்ற இவரது இயற்பெயரை இவனா என மாற்றிக்கொண்டார்.

தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலே நல்ல பரீட்சியமான நடிகையாக பெயரெடுத்தார். இளம் வயதிலேயே தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது.

iavana dp

குறிப்பாக லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், ஒரு வேலை படவாய்ப்புகளே கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த இவனா, சினிமாவை நம்பி இருக்கவே முடியாது. அது எப்போ சறுக்கும் என தெரியாது. அதனால் தான் நான் தொடர்ந்து மேற்படிப்புகள் படித்து வருகிறேன். சினிமா வாய்ப்பு இல்லை என்றால் நான் தொழில் செய்வேன். என்னுடைய அப்பா தொழிலதிபராக தான் இருக்கிறார். எனவே அவர் வழியில் நானும் செல்வேன் என கூறியுள்ளார்.

  • assistant director told that aan paavam pollathathu movie script is mine கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?