சிவகார்த்திகேயனை நம்பினால் நடுத்தெருவுக்கு தான் போகணும்.. கிழித்தெடுத்த பிரபலம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 5:59 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். சாய் பல்லவி கதநாயகியாக நடிக்க, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனுடைய உண்மைக்கதையை படமாக்கியிருந்தனர். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

அமரன் படத்திற்கு எல்லா பக்கமமே அமோக வரவேற்பு வந்துள்ளது. கச்சிதமான உடல், பேச்சு, கம்பீரம் என அனைத்துமே எஸ்கேவுக்கு பொருந்தியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சாய் பல்லவியும் தனது பங்கிறகு அடித்து ஆடியிருக்கிறார். இதுவரை படம் ரூ.150 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருவதால் எஸ்கே கேரியரில் ஒரு மைல்கல்லாக படம் அமைந்துள்ளது.

இந்த சூழலில் பிரபல சினிமா பத்திரிகையாளரான சுபைர் தனது முகநூல் பக்கத்தில் எஸ்கே குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் எஸ்கே ஒரு மிக சிறந்த வியாபாரி, எப்படி எந்த இடத்தில் ப்ரோமோட் செய்ய வேண்டுமோ அப்படி செய்வதில் அவர் வல்லவர் என கூறியுள்ளார். முன்னதாக சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் தனது அப்பா தாஸ் பற்றி கூறி அழுதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 109

    0

    0