இப்படியெல்லாம் பேசின மைக் கொடுத்திட்டு போயிடுவேன் – வெற்றிமாறனால் Tension ஆன இளையராஜா!

Author: Shree
9 March 2023, 1:41 pm

இனிமையான இசைக்கு சொந்தக்காரரும் தன் இடத்தை யாராலும் கனவில் கூட பிடிக்கமுடியாத அளவுக்கு நுனி உச்சத்தை தொட்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

அந்தவகையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இளையராஜா மேடையில் வெற்றிமாறன் குறித்து பெருமையாக பேசினார். அதாவது, வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு அலைகளைக் கொண்டது.

தமிழ் சினிமாவிற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர். இதை நான் 1500 படங்களை முடித்த பின்னர் சொல்கிறேன் என பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர்.

இதனால் பேசமுடியாமல் கோபப்பட்ட அவர், மைக்கை கொடுத்துவிட்டு நான் பாட்டுக்கு போயிடுவேன் என்று டென்ஷனாக பேசி இருக்கிறார். அதன் பின்னர் ரசிகர்கள் சத்தம் அடங்க மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ரசிகர்கள் என்பதற்கு அர்த்தமே அது தானே? ரசனை தெரியாத ஆளா இருக்காரே நம்ம ராஜா என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர். ரசிகர்கள் இல்லை என்றால் இன்று உங்களுக்கு இப்படி ஒரு அடையாளமே இருந்திருக்காது யோசித்து பேசுங்கள் ஐயா என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!