“உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாதா…! படிச்சவுங்க தானே…!” – இமைக்கா நொடிகள் பிரபலம் ஆவேசம்…!

26 March 2020, 3:33 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.

Listen to the words of my little co actress in Iruttu and Maamanithan..

Shaji Chen यांनी वर पोस्ट केले गुरुवार, २६ मार्च, २०२०


இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ,ராஷி கண்ணா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவர் மானஸ்வி. இவர் தற்போது இணையதளத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோவாக ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


” உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாதா…! படிச்சவுங்க தானே…! உங்களுக்கு வந்தா எங்களுக்கும் வந்துரும்னு தெரியாத…! எங்க உயிரையும் சேத்து கொன்னுடாதீங்க…! ப்ளீஸ் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருங்க” என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதியின் “மாமனிதன்” திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply