2022-ஆம் ஆண்டின் டாப் இந்திய நடிகர், நடிகைகள்..! தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பிரபலங்களில் முதல் இடத்தில் இவங்களா..?

Author: Vignesh
7 December 2022, 7:00 pm
top actor - updatenews360
Quick Share

2022ஆம் ஆண்டு இறுதில் இருக்கும் இந்த நேரத்தில் திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் யார்யார், எந்தெந்த வகையில் டாப் 10 இடங்களை பிடித்துள்ளார்கள் என்று தொடர்ந்து பல பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது அந்த வரிசையில் IMDB தளம் 2022ஆம் ஆண்டில் இந்தியளவில் பிரபலமான டாப் 10 நடிகர், நடிகைகள் குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

IMDB வெளியிட்டுள்ள இந்த டாப் 10 பிரபலமான இந்திய நடிகர் நடிகைகள் லிஸ்ட் இதோ..

1.தனுஷ்
2.அலியா பட்
3.ஐஸ்வர்யா ராய்
4.ராம் சரண்
5.சமந்தா
6.ஹ்ரித்திக் ரோஷன்
7.கியாரா அத்வானி
8.என்.டி.ஆர்
9.அல்லு அர்ஜுன்
10.யாஷ்

dhanush -updatenews360-1

இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்தையும், நடிகை சமந்தா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha - Updatenews360

தேசிய விருது பெற்ற நடிகரும், Global Iconனுமான நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார். ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ‌ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயிலாக, முதல் முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார்.

top actor - updatenews360

இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும். ‘வாத்தி/ சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்ட திரைப்படங்கள் ஆகும்.

Views: - 854

2

0