இந்தியன் தாத்தா கெட் அப்.. படத்தை பார்க்க குதிரையில் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்..!
Author: Vignesh12 July 2024, 3:18 pm
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இன்று இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை வித்தியாசமான முறையில் ப்ரமோட் செய்து வரும் கூல் சுரேஷ் இந்தியன் 2 படத்தினையும் ப்ரமோட் செய்து இருக்கிறார். சென்னை ரோகினி தியேட்டருக்கு முதல் காட்சி பார்க்க குதிரை ஓட்டிக்கொண்டு இந்தியன் தாத்தா கெட்டப்பில் கையில் கத்தியுடன் கூல் சுரேஷ் வந்துள்ளார். தியேட்டருக்கு வந்த ஸ்கூல் சுரேஷ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறி செய்து அலப்பறை செய்து இருக்கிறார். அவரை பார்த்து பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0
0