வடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாராகும் இளம் நடிகை இனியா – வைரலாகும் புகைப்படங்கள்…!

9 August 2020, 10:20 pm
Quick Share

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது கையில் சொம்பு ஒன்றை வைத்துக்கொண்டு பாரம்பரிய உடையில் அம்சமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கையில் சொம்புடன் எங்கே கிளம்பிடீங்க, வடிவேலுவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? சொம்பு ரெடி.. மாப்பிள்ளை வடிவேலு ரெடியா..? என்று கலாய்க்கிறார்கள்.

மேலும், பார்த்திபன், வடிவேலு இணைந்து நடித்த காதல் கிறுக்கன் என்ற படத்தில் “சொம்பு கொடுத்தா தான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்” என்ற காமெடி காட்சியை நினைவில் கொண்டு தான் இப்படி கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.