என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!
Author: Prasad2 July 2025, 2:05 pm
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர்
கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர் திவாகர். இவர் ஒரு பிசியோதெரபி டாக்டர் என்றாலும் சமீப காலமாக இன்ஸ்டாவில் பல ரீல்கள் செய்து தனது நவரசத்தையும் காட்டி மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.
எதிர்பாராத வகையில் இவர் எங்கு சென்றாலும் இவரை செல்ஃபி எடுக்க பல ரசிகர்கள் கூடிவிடுகின்றனர். இணையத்தில் இவரை பலரும் ட்ரோல் செய்தாலும் தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற நம்பிக்கையில் இருந்து அவர் சற்றும் விலகவில்லை. அந்த வகையில் பல பேட்டிகளில் தன்னுடைய நடிப்பு திறமை குறித்து பேசிவருகிறார் திவாகர்.

ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட திவாகர், “எனக்கு இருக்கும் திறமைக்கு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. என்னுடைய லெவல் அது கிடையாது. நான் பெரிய படிப்பு படித்திருக்கிறேன். நான் ஒரு Professional. ஏற்கனவே ஒரு Professional ஆக இருந்துகொண்டு ஒன்றுமே இல்லாமல் ஐநூறு ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் நடிக்க முடியாது. நான் நல்ல நடிப்புத் திறமையை காட்டிவிட்டேன். கடவுளும் மக்களும் கலைத்தாயும் நிச்சயம் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார்கள்” என கூறியுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.