ஜனநாயகன் படத்துல நடிக்க கூப்பிட்டாங்க-உருட்டுனது போதும்! ட்ரோலில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்!
Author: Prasad19 May 2025, 8:21 pm
டிரெண்டிங் இன்ஸ்டா பிரபலங்கள்
இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பல பெண்கள் பிரபலம் ஆனது உண்டு. அந்த வரிசையில் இன்ஸ்டாவில் இடைவிடாது ரீல்ஸ் செய்து பிரபலமானவர்கள்தான் கனி, சக்தி ஆகிய இரு சகோதரிகளும். கனி மற்றும் சக்தி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் பல ரீல்கள் வைரலான நிலையில் இன்ஸ்டாவாசிகள் பலருக்கும் பரிச்சயமானவர்களாக ஆனார்கள். இவர்கள் தொடர்ந்து பல பேட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது கனி கூறிய ஒரு விஷயம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் படத்துல நடிக்க கூப்பிட்டாங்க?
“தனுஷ் சார் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். அது ஒரு சின்ன கதாபாத்திரம்தான். அதன் பின் சிவகார்த்திகேயன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். மேலும் தளபதி 69 படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். எனக்கு எதிலும் ஆர்வம் இல்லை.
பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும் என்றால், ஆமா இவள் பெரிய இவ, என்றுதான் சொல்ல தோன்றும், ஆனால் என்னுடைய இடத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும். என்னுடைய அப்பாவிற்கு இது எல்லாம் பிடிக்காது.

நாங்கள் ரீல்ஸ் போடத் துவங்கிய போது கூட அவரிடம் புரிய வைத்துதான் எல்லாம் செய்தோம். ஆதலால் அவர் சினிமாவிற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்” என கனி அப்பேட்டியில் கூறியிருந்தார்.
இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில், “ரீல் விடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு”, “உருட்டு உருட்டு” போன்ற கம்மண்ட்டுகளால் இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
