கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: சகீலா அதிரடி பேட்டி!

26 February 2021, 10:03 pm
Quick Share

நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று நடிகை ஷகீலா அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பிளே கேர்ள்ஸ் என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சகீலா. அப்போது அவருக்கு வயது 18. தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை, மறுமலர்ச்சி, உதவிக்கு வரலாமா, தூள், ஜெயம், வசீகரா, வாத்தியார், அழகிய தமிழ் மகன், வியாபாரி, மலை மலை, சிவா மனசுல சக்தி, வல்லக்கோட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், குரு சிஷ்யன், பொட்டு, கன்னி ராசி என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 250 படங்கள் வரை நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்துமே பி கிரேடு படங்களாகவும் பான் மூவிஸ் ஆகவும் இருந்துள்ளன. சகீலாவின் நடிப்பிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அண்மையில், சகீலாவின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றன. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இதில், அவருக்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு ஒரு அம்மாவாக திகழ்கிறார். இதுவரை இருந்த சகீலாவின் இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலுமாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்படி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், கண்டிப்பாக அரசியலுக்கு வரப்போகிறேன்.

ஆனால், எந்தக் கட்சி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இன்று காலையில், கூட சில மீட்டிங் நடந்தது. மக்களுக்கு நல்லது பண்ணுவது இவங்க தான் என்று என் மனசுல படுதோ, அந்தக் கட்சியில் நான் கண்டிப்பாக இருப்பேன். அப்போது மக்கள் என்று ஆரம்பிக்கும் கட்சியில் இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இவ்வளவு பேசிய நான் அதையும் தைரியமாக சொல்லிவிடுவேன். என் மக்களுக்கு, அரசிடமிருந்து எனக்கு என்ன என்ன வேணும் என்று நான் நினைக்கிறேனோ அதையெல்லாம், எந்த கட்சி கொடுக்கிறேனு சொல்லுதோ, கண்டிப்பாக அந்தக் கட்சியில் நான் இருப்பேன்.

மேலும், ஒரு கட்சி மற்றொரு கட்சியைப் பார்த்து தவறு சொல்வதும், அந்தக் கட்சி இந்தக் கட்சியைப் பார்த்து குற்றம் சொல்வதும் தான் காலம் காலமாக நடந்து வருகிறது. வந்தவர்களும் நல்லது பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எப்போதும், அவர்கள் செய்யாததை குறிப்பிட்டு குற்றம் சொல்வதற்கு மாறாக, என்ன நன்மை செய்ததோ அதை ஏன் யாருமே பாராட்டுவதில்லை? அதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிற ஒரே விஷயம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது மட்டுமே. இது மட்டும் நடக்கவே கூடாது. அதற்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயார் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 264

1

0