ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?
Author: Prasad6 May 2025, 12:46 pm
வழக்கில் சிக்கிய ரஹ்மான்
இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்திய சினிமாக்கள் மட்டுமல்லாது உலக சினிமாக்களிலும் இவரது புயல் வீசியடித்தது. இவ்வாறு மிகப் பெரிய பெருமைகளை உடைய ஏ.ஆர்.ரஹ்மான் மீது சமீபத்தில் ஒரு வழக்கு பாய்ந்தது.

அதாவது 2023 ஆம் ஆண்டு வெளியான “பொன்னியின் செல்வன் 2” திரைப்படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற “வீர ராஜ வீர” என்ற பாடல், சிவ ஸ்துதி என்ற பாடலை தழுவி இசையமைக்கப்பட்ட பாடல் என்றும் தங்களுடைய அனுமதி இல்லாமல் இதனை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் எனவும் சம்பந்தப்பட்டவர்களால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபது ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டார்.
மேல் முறையீடு
இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
