சர்வதேச அளவில் சரித்திர சாதனை படைத்த RRR : இந்திய சினிமாவுக்கு கிடைத்த கௌரவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 12:02 pm

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் RRR. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, எனெர்ஜியான பாடலான நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலின் வீடியோவும் துள்ளலான நடனத்துடன் இருந்ததால் அதிக பேரால் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழு விருதினை பெற்றனர். ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த விருதை நாட்டு நாட்டு பாடல் பெற்றது. இதனையடுத்து படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?